தேனி:

தேனி மாவட்டம் போடி குரங்கணியில் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 40 பேர் காட்டுத்தீயில் சிக்கியுள்ளனர்.

போடி அருகே குரங்கணி- கொழுக்கு மலைப்பகுதியில் மலையேற்ற பயிற்சிக்கு கோவை, ஈரோடு ப குதியைச் சேர்ந்த மாணவர்கள் சென்றுள்ளனர். அங்கு திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயில் மாணவர்கள் அனைவரும் சிக்கியுள்ளனர். இதில் பலர் தீக்காயங்களுடன் அவதிப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

காட்டுத்தீ ஏற்பட்டுள்ள பகுதிக்கு தேனி கலெக்டர், எஸ்.பி. பாஸ்கரன் விரைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கும் பணிகள் முடுக்கிவிட்டப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன. மாணவர்களை மீட்கும் முயற்சியில் போலீசார், அப்பகுதி மக்களும் ஈடுபட்டு வருகின்றனர். துணைமுதல்வர் ஓ. பன்னீர் செல்வம் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்.

மாணவர்களை மீட்க விமானப்படைக்கு ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து ராணுவ விமானப்படை விமானங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. மீட்புப்பணிக்கு கோவையிலிருந்து ஹெலிகாப்டர்கள் விரைந்துள்ளன.