டெல்லி: டெல்லியில் 40 பேருக்கு உருமாறிய புது வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் உருமாறிய புதிய கொரோனா தொற்றால் இதுவரை 29 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 494 பேர் இந்த புதிய தொற்றால் பாதிக்கப்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லியில் உருமாறிய புதிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் பிரிட்டனில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.
இது குறித்து டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறி இருப்பதாவது: டெல்லியில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 0.73 சதவீதமாக உள்ளது. புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 500க்கும் குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
மருத்துவமனைகளில் 11 ஆயிரம் படுக்கைகள் காலியாக உள்ளன. 2 ஆயிரம் படுக்கைகள் மட்டும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 40 பேருக்கு உருமாறிய புதிய கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்க 4 தனியார் மருத்துவமனைகளுக்கு அங்கீகாரம் அளித்துள்ளோம் என்று கூறினார்.