மும்பை: கொரோனா ஊரடங்கு கடுமையாக இருந்த காலத்தில், 40% சில்லறை வணிகம், வாட்ஸ்ஆப் மூலமாகவே நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மார்ச் 25 முதல் இன்றைய தேதி வரையில், தங்கள் வணிகத்தில் 40%, வாட்ஸ்ஆப் மூலமாகவே நடைபெற்றதாக சில்லறை வணிகர்கள் தெரிவிக்கிறார்கள்.
“குளியல் பொருட்கள் மற்றும் ஆடைகள் உள்ளிட்ட பலவற்றை நாங்கள், இந்த ஊரடங்கு காலத்தில் வாட்ஸ் ஆப் மூலமாகவே விற்பனை செய்தோம். இந்த வாட்ஸ்ஆப் வசதிதான், எங்கள் வணிகத்தில் 40% ஐ நடத்தியது மற்றும் எங்களுக்குப் பெரிதும் உதவியது” என்றுள்ளார் மேஜர் பிராண்ட்ஸ் (இந்தியா) நிறுவனத்தின் தலைவர் துஷார் வெட்.
கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த காரணத்தால், வாட்ஸ்ஆப் மூலமாகவே பொருட்களின் படங்கள் மற்றும் விபரங்கள் அனைத்தும் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வணிகம் நடைபெற்றது.