புனே
மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இன்று மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள பாட் கிராமம் அருகே தனியார் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நடந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த விமானம் யாருடையது என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் விமானத்தில் விமானி உட்பட 4 பேர் பயணம் செய்துள்ளனர். பாட் அருகே கோடவாடே என்ற இடத்தில் நடந்த இந்தவிபத்து நடந்த இடத்தில் உள்ளுர் மக்கள் குவிந்தனர். உடனடியாக மீட்பு படையினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து 4 பேரிகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.
கயமடைந்தோர். உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். விமானி விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் அருகே செல்ல வேண்டாம் என விமானி பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இந்த ஹெலிகாப்டர் எந்த நேரத்திலும் வெடித்து சிதறலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]