பாட்னா,

உ.பி.யில் காரில் சென்ற ஒரு குடும்பத்தை வழிமறித்து அதனுள் இருந்த  4 பெண்களை கொள்ளை கும்பல் கொள்ளைடியத்து,  வன்புணர்வு செய்துள்ளது. இது கொடூர சம்பவம் உ.பியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் புலாந்த்ஷாஹர் அருகே உள்ள கிராமம் கவுதம்புத் நகர். இது யமுனை எக்ஸ்பிரஸ் ஹைவே பகுதியில் உள்ள ஒரு கிராமம். இந்த பகுதியில்தான்  இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.

 

சம்பவத்தன்று  ஒரு குடும்பத்தை சேர்ந்த   உறுப்பினர்கள் மாருதி ஈகோ காரில்  நள்ளிரவு 1.30 மணி அளவில் யமுனை எக்ஸ்பிரஸ் ஹைவே வழியாக நொய்டாவின் ஜூவாரில் இருந்து புளந்த்ஷாஹர் நோக்கி பயணித்தனர்.

கார் கவுதம்புத் நகர் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது  திடீரென பஞ்சர் ஆனது. இதன் காரணமாக சிறிது தூரம் சென்று  கார் நிறுத்தப்பட்டது.

அப்போது ஒரு கும்பல் திடீரென வந்து அந்த  குடும்பத்தினரிடமிருந்து பணம் மற்றும் விலையுர்ந்த  பொருட்களை சூறையாடினர். பின்னர் அந்த காரில் இருந்த பெண்களை தூக்கிச்சென்று கற்பழித்தனர். இதை எதிர்த்த அந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவரை  கொள்ளை கும்பலை சேர்ந்த ஒருவன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றான்.

இந்த கொடூர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உளளது.

இந்த கொடூர சம்பவம் குறித்து கவுதம்புத் நகர் போலீஸ் கண்காணிப்பாளர்  லவ் குமார்  கூறியதாவது,

இந்த கொடூர சம்பவம் நடைபெற்றது உண்மை என்றும், சம்பவம் நடைபெற்ற இடம்  உத்தரபிரதேச மாநிலம் கவுதம் புத் நகர் அருகே உள்ள யமுனா எக்ஸ்ப்ரெஸ்வேயில் உள்ளது என்று கூறினார்.

மேலும் இந்த கொடூர சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து இரண்டு தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்றும்,

காரில் வந்த பெண்களில் 4 பேர் அந்த பகுதியில் உள்ள புல்வெளி பகுதிக்கு தூக்கிச் சென்று வன்புணர்வு செய்துள்ளதாகவும், வன்புணர்வு செய்யப்பட்ட பெண்கள் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதற்கான அறிக்கை இன்று பிற்பகலில் கிடைக்கும் என்றும்,

கொள்ளை கும்பலின் தாக்குதலில் இறந்த நபரின் உடல் கைப்பற்றப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பபட்டு உள்ளதாகவும் அவர்  கூறினார்.

இதுகுறித்து அந்த பகுதி எம்எல்ஏ  தாகூர் தூயந்திர சிங் கூறியதாவது,

இந்த கொடூர சம்பவத்தில்  பாதிக்கப்பட்டவர் ஒரு நகைச்சுவை குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும்,  அவர்கள் சென்ற  ஈகோ காரில் குற்றவாளிகள் டயரில் ஏதோ ஒன்றை எறிந்தனர், இதன் காரணமாக டயர் பஞ்சர் அடைந்துள்ளது. இருந்தாலும்  கார் ஓட்டுநர் காரை நிறுத்தாமல் சற்று தூரம் சென்று ஒரு குடிசை அருகே நிறுத்தி உள்ளார் என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே, கடந்த ஜூலையில், அம்மாவும் அவரது 13 வயது மகளும் புளந்த்ஷாஹர் நகரத்தில் நெடுஞ்சாலைத் திருடர்களின் குழுவால் வழிநடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்.

இதுபோன்ற சம்பவங்களால்தான் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற மோசமான நிலைமை நீடித்து வருகிறது என்பது  குறிப்பிடத்தக்கது.

பாரதியஜனதா ஆட்சிக்கு வந்தபிறகு உ.பி.யில் கொலை, கொள்ளை கட்டுப்படுத்தப்பட்டு விட்டது என்று ஆளும் தரப்பினர் கூறிவரும் நிலையில் தற்போது நடைபெற்றுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.