டெல்லி
இன்று காலை நாடாளுமன்ற தேர்தலுக்கான 4 ஆம் கட்ட வாக்குப்ப்பதிவ் 96 தொகுதிகளில் தொடங்கி உள்ளது.
ஏற்கனவே மக்களவை தேர்தல் மூன்று கட்டமாக நடந்து முடிந்துள்ளது., கடந்த ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவில் 283 இடங்களுக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இன்று 4 ஆம் கட்டமாக 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 96 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது. இ
இதையொட்டி ஒரு லட்சத்து 92 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று ஆந்திரபிரதேசத்தில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும், ஒடிசாவில் உள்ள 28 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இன்று ஆந்திராவில் 25 தொகுதிகள், பீகாரில் 5 தொகுதிகள், ஜம்மு & காஷ்மீரில் 1 தொகுதி, ஜார்க்கண்டில் நான்கு தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் 8 தொகுதிகள், மகாராஷ்ட்ராவில் 11 தொகுதிகள், ஒடிஷாவில் நான்கு தொகுதிகள், தெலங்கானாவில் 17 தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் 13 தொகுதிகள், மேற்குவங்கத்தில் 8 தொகுதிகள் என மொத்தம் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இன்றைய நான்காம் கட்ட வாக்குப்பதிவை ஒட்டி மொத்தம் 4661 பறக்கும் படைகள், 4438 நிலையான கண்காணிப்பு குழுக்கள், 1710 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 934 வீடியோ பார்க்கும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. காவல்துறையினர் மற்றும் துண ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.