வாடிகர்நாடகாவில் ரெயில் என்ஜின் தானாக ஓடிய சம்பவத்தில் அதிகாரிகள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

 

சென்னை&மும்பை இடையே மும்பை மெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் கடந்த 8ம் தேதி மதியம் கலபுரகி மாவட்டம் வாடி ரெயில் நிலையம் வந்தடைந்தது. அப்போது அங்கு எலெக்ட்ரிக் என்ஜினை மாற்றிவிட்டு டீசல் என்ஜினை பொருத்தும் பணி நடந்தது.

அப்போது திடீரென எலெக்ட்ரிக் என்ஜின் மட்டும் டிரைவர் இல்லாமல் 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு தானாக ஓடியது. பின்னர் என்ஜின் டிரைவர் மற்றும் ரெயில்வே ஊழியர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று துரிதமாக செயல்பட்டு எலெக்ட்ரிக் என்ஜினை நிறுத்தினர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து ரெயில்வே நிர்வாகம் சார்பில் விசாரணை நடத்தப்படுகிறது. முதல்கட்ட விசாரணையில் எலெக்ட்ரிக் என்ஜின் மட்டும் டிரைவர் இல்லாமல் ஓடியதற்கு வாடி ரெயில் நிலையத்தில் பணியாற்றும் அதிகாரிகள் 4 பேரின் அலட்சியமே காரணம் என்று தெரியவந்தது.

இதையடுத்து, வாடி ரெயில் நிலைய மேலாளர் சந்தோஷ் தாரே மற்றும் 3 அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்து ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.