டாக்கா

ங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது மேலும் 4 கொலை வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

NEW DELHI, INDIA – SEPTEMBER 6: Prime Minister of Bangladesh Sheikh Hasina and Prime minister Narendra Modi address media persons after inspecting guard of honour during the ceremonial reception at Rashtrapati bhawan on September 6, 2022 in New Delhi, India. India and Bangladesh signed seven Memorandum of understanding (MoUs). Foreign secretary Vinay Kwatra said on Tuesday that Prime Minister Narendra Modi and Bangladeshi PM Sheikh Hasina has a discussion on a range of bilateral issues related to water, trade, economic ties etc. (Photo by Sonu Mehta/Hindustan Times via Getty Images)

இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வங்கதேசத்தில் மாணவா்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதனால் ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.

வங்கதேசத்தில் தற்போது நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணா் முகமது யூனுஸ் இடைக்கால அரசின் தலைவராக உள்ளார். அதே வேளையில் நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனாவிற்கு எதிராக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

இதுவரை வங்கதேச கலவரம் தொடா்பாக 42 கொலை வழக்குகள் உள்பட 51 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஷேக் ஹசீனா மீது மேலும் 4 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே, ஷேக் ஹசீனாவின் தூதரக பாஸ்போர்ட்டு ரத்து செய்யப்பட்டதால் அவர் வங்கதேசத்திற்கு நாடு கடத்தப்படும் சூழல் உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்