சென்னை: தமிழ்நாட்டில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்  செய்யப்பட்டு உள்ளனர். நேற்று காவல்துறையில் சீருடை பணியாளர்களுக்கு பணிக்கான நியமன ஆணை வழங்கப்பட்ட நிலையில், 4 ஐபிஎஸ் அதிகாரிகள் இட மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக, கூடுதல் தலைமைச் செயலாளர்  தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும், ஒரு எஸ்.பி. பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு நிறுவனத்தின் லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஜிபியாக ராஜீவ் குமார் நியமனமிக்கப்பட்டுள்ளார்.

ரயில்வே காவல்துறை டிஜிபியாக வன்னியபெருமாள் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் ஐ.ஜி. ஆக எஸ்.மல்லிகா,

சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து காவல்துறை ஐ.ஜி. ஆக அபிஷேக் தீக்ஷித் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை எஸ்.பி. ஆக முத்தமிழ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.