புனே: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா, 50 ஓவர்களில் 317 ரன்களைக் குவித்துள்ளது.
ஒரு கட்டத்தில், 270 ரன்களையே தொடுமா? என்ற சந்தேகம் நிலவிய நேரத்தில், ஆறாவது மற்றும் ஏழாவது விக்கெட்டாக களத்தில் நின்ற ராகுல் மற்றும் கருணால் பாண்ட்யா இணை, ஆட்டத்தை தங்கள் கைவசம் எடுத்துக்கொண்டு, அடித்து வெளுத்துவிட்டனர்.
ஷ்ரேயாஸ், தவான் மற்றும் ஹர்திக் பாண்ட்யா அடுத்தடுத்து அவுட்டான நிலையில், இந்தியாவுக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டது. சிறிய மைதானத்தில், எப்படியும் 300 ரன்களைத் தொட்டால்தான் வெற்றியை உறுதிசெய்ய முடியும் என்ற நிலையில், கருணாலும், ராகுலும் அணியை மீட்டனர்.
முதலில் நிதானமாக ஆடிவந்த ராகுல், பின்னர் கடைசி கட்டத்தில் அதிரடிக்கு மாறி, 43 பந்துகளில் 62 ரன்களைக் குவித்தார். கருணால் 31 பந்துகளில் 58 ரன்களை விளாசினார். அவர் 2 சிக்ஸர்கள் & 7 பவுண்டரிகளை அடித்தார்.
இதனால், 50 ஓவர்களில், 5 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 317 ரன்களைக் குவித்து, இங்கிலாந்துக்கு சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது இந்தியா.
இங்கிலாந்து தரப்பில் மார்க வுட் 2 விக்கெட்டுகளையும், ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர். பிறருக்கு விக்கெட்டுகள் கிடைக்கவில்லை.