சதுரகிரி
மார்கழி மாத பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலைக் கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பிரதோஷம் மற்றும் மார்கழி மாத பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர்.
இதன்படி பக்தர்கள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மலையேறி செல்ல அனுமதி உண்டு. மேலும் இரவு நேரத்தில் பக்தர்கள் கோவில் வளாகப்பகுதியில் தங்குவதற்கு அனுமதி கிடையாது. தவிர மலைப்பாதையில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நாட்களில் எதிர்பாராதவிதமாக மழை பெய்தால் அனுமதி ரத்து செய்யப்படும், கோவிலுக்கு வரும். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.