சென்னை:

மிழகத்தில்காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

அதன்படி,  ஓட்டபிடாரம் 15 பேர், திருப்பரங்குன்றம் 37 பேர், அரவ குறிச்சி 63 பேர், சூலூர் 22 பேர் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வரும் 19-ந்தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் சார்பில் வேட்பாளர்கள் களத்தில்உள்ளனர். இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 29ந்தேதியுடன் முடிவடைந்த நிலையில், வேட்புமனு பரிசீலனை, வேட்புமனு வாபஸ் பெறும் நாள் நேற்றுடன் முடிவடைந்தது.

இதைத்தொடர்ந்து  சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட மொத்தம் 63 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 44 ஏற்கப்பட்ட நிலையில், 4 பேர் வாபஸ் பெற்றனர். தற்போது 37 வேட்பாளர்கள் களத்தில் உள்ளன.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் 63 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

சூலூர் தொகுதியில் 22 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 16 பேர் சுயேட்சைகள்.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட 41 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

அவற்றில் 18 மனுக்கள் ஏற்கப்பட்டன. சுயேட்சை வேட்பாளர்கள் 3 பேர் வாபஸ் பெற்றதால் அங்கு 15 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.