சென்னை:

மிழகத்தில் காலியாக உள்ள  4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19-ந்தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதை தொடர்ந்து, வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ளது.

அந்த தொகுதிகளில் அரசியல் கட்சியினர் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ள நிலையில், முதல்வர்  எடப்பாடி பழனிசாமி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வருகின்ற மே 1-ந்தேதி முதல் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

ஏற்கனவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரும் மே1ந்தேதி தங்களது பிரசாரத்தை தொடங்குவதாகஅறிவித்துள்ள நிலையில், முதல்வர் எடப்பாடியும் அன்றைய தினமே தனது பிரசார பயணத்தை மேற்கொள்கிறார்.

இதுதொடர்பாக அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19-ந் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப் பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வருகின்ற மே 1-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி 2கட்ட தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ள உள்ளார்.

மே 1-ந் தேதி மற்றும் மே 14-ந் தேதி – சூலூர் தொகுதி.

மே 5-ந் தேதி மற்றும் மே 13-ந் தேதி  – அரவக்குறிச்சி தொகுதி.

மே 6-ந் தேதி மற்றும் மே 11-ந் தேதி – திருப்பரங்குன்றம் தொகுதி.

மே 7-ந் தேதி மற்றும் மே 12-ந் தேதி – ஓட்டப்பிடாரம் தொகுதி.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.