கிஷான் கஞ்ச்
மீண்டும் பீகாரில் மற்றொரு பாலம் இடிந்து விழுந்துள்ளது.
கடந்த வாரம் பீகாரின் அராரியா, சிவான் மற்றும் கிழக்கு சம்பாரண் ஆகிய மாவட்டங்களில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட பாலம் உள்பட 3 பாலங்கள் அடுத்தடுத்து இடிந்து விழுந்த நிலையில் தற்போது மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்துள்ளது.
பீகார் மாநிலம் கிஷான்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள 2 கிராமங்களை இணைக்கும் வகையில் பஹதுர்கஞ்ச் பகுதியில் மதியா ஆற்றின் மீது பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் பயன்பட்டுக்காக திறக்கப்பட்ட நேற்று காலை திடீரென இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. மாவட்ட ஆட்சியர் கனமழையால் ஆற்றில் நீரோட்டம் திடீரென அதிகரித்ததாகவும், அதன் காரணமாக பாலம் இடிந்து விழுந்ததாகவும் தெரிவித்த பாலத்தை பழுது பார்க்கும் பணிகள் உடனடியாக தொடங்கியுள்ளதாக கூறினார்.
பீகார் மாநிலத்தில் அடுத்தடுத்து 4 பாலங்கள் இடிந்து விழுந்தது, பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.