மதுரை:
மதுரை மாவட்டம் சிலைமானை அருகே உள்ள அனஞ்சியூரில் கோடை விடுமுறைக்காக கிஷோர், சூர்யா, சுபாஷினி, அமுதகனி ஆகிய 4 சிறுவர்கள் வந்தள்ளனர். உறவினர்கள் வீடுகளில் தங்கியிருந்த 4 பேரும் இன்று மாலை கன்மாய் ஒன்றில் குளிக்க சென்றனர்.
அப்போது திடீரென 4 பேரும் நீரில் மூழ்கினர். உடன் அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்க முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 4 பேரின் உடல்களையும் மீட்டனர். இ குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.