அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் 19 வயது நிரம்பிய பட்டியலின பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றததாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஜனவரி 1 ம் தேதி பாதிக்கப்பட்ட பெண் காணாமல் போயிருந்தார். ஆனால் அதற்கு அடுத்த நாள் அவர் கிராமத்தில் காணப்பட்டார், ஆனால் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து, ஜனவரி 3 ம் தேதி அவரது தந்தை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். 2 நாட்கள் கழித்து, அவரது உடல் மரத்தில் இருந்து தொங்க விடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் தங்கள் மகளை 4 ஆண்கள் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். காணாமல் போன வழக்கை பதிந்த உள்ளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆனால், ஞாயிறன்று பாதிக்கப்பட்டவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டபோது, தற்செயலான மரணம் என போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த உறவினர்கள் போராட்டங்களில் இறங்கினர்.
அதன்பிறகே, பிமல், தரிசனம், சதீஷ் மற்றும் ஜிகார் என அடையாளம் காணப்பட்ட நான்கு நபர்கள் மீது கடத்தல், கும்பல் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை ஆகியவற்றுடன், பல்வேறு பிரிவுகளில் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்தனர்.
பாதிக்கப்பட்டவரின் உறவினர்களுடமும், மற்ற அனைத்து கோணங்களில் நாங்கள் விசாரித்திருக்கிறோம். பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம் என்று காந்திநகர் காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் மாயன்க்சிங் சவ்தா கூறினார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயூர் பாட்டீல் கூறியதாவது: எங்களால் இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. ஆனால் நாங்கள் விரைவில் வழக்கில் உண்மையை தெரியப்படுத்துவோம் என்றார்.