டெல்லி
திருப்பதி லட்டுவில் மிருகக் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக் காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டுகளில் விலங்குகள் கொழுப்பு கலந்த நெய்யில் தயாரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்து இது ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.
உச்சநீதிமன்றம் திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் ஆந்திரா அரசு அமைத்த விசாரணை குழுவுக்கு பதிலாக புதிய சுதந்திரமான ‘சிறப்பு புலனாய்வுக் குழு’ (எஸ்ஐடி) அமைக்க உத்தரவிட்டது. சி.பி.ஐ. 5 அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுவை அமைத்தது. அதில் சி.பி.ஐ. தரப்பில் 2 அதிகாரிகள், ஆந்திரா காவல்துறை அதிகாரிகள் 2 பேர், உணவுத் தர கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் இடம் பெற்றிருந்தனர்.
, திருப்பதி லட்டு கலப்படம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு தனது விசாரணையை தொடங்கி தமிழகத்தின் திண்டுக்கல்லில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிலும், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலும் சிறப்பு புலனாய்வுக் குழு சோதனைகள் நடத்தியது.
இந்நிலையில் விலங்குகள் கொழுப்பினை நெய்யில் கலந்த விவகாரம் தொடர்பாக 4 பேரை சிறப்பு புலனாய்வு குழுவினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். திண்டுக்கல் நிறுவனத்தை சேர்ந்த ராஜசேகரன், உத்தரகாண்ட் நிறுவனத்தை சேர்ந்த விபின் ஜெயின்,பொமில் ஜெயின், அபூர்வா சாவ்டா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.