பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
அதிகாலை 4:30 மணியளவில் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்த ராணுவ முகாமில் இருந்து இன்சாஸ் ரக துப்பாக்கியும் 28 தோட்டங்களும் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் சாதாரண உடையில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும், இது பயங்கரவாத தாக்குதல் இல்லை என்றும் பதிண்டா காவல்நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து அந்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகக் கூறப்பட்டுள்ளது.