இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 4.5 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி காலை 10.52 மணிக்கு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 178 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலை கொண்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.