தென்காசி: சர்ச்சைகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, குற்றாலம் பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் 3-வது முறையாக நடைபெற்றது. இதில்,  குற்றாலம் பேரூராட்சி தலைவராக அதிமுக கவுன்சிலர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

குற்றாலம் பேரூராட்சியில்  8 வார்டுகள் உள்ளன. இதில் திமுக, அதிமுக இரண்டுமே தலா நான்கு வார்டுகளில் வென்றன.  இதனால் தலைவர் பதவியை பிடிக்க இரு கட்சிகளிடையே கடுமையான போட்டி நிலவி வந்தது. இந்த நிலையில்,  கடந்த மார்ச் 4-ம் தேதி நடைபெற்ற பேரூராட்சி தலைவருக்க்கான மறைமுகத் தேர்தலின்போது அதிமுக கவுன்சிலர்கள் மட்டுமே வந்தனர். திமுக கவுன்சிலர்கள் வரவில்லை. இதனால் முதல்முறையாக மறைமுகத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து மார்ச் 24-ம் தேதிக்கு மீண்டும் மறைமுகத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, திமுக கவுன்சிலர்கள் வாக்களிக்க வராததால்,  மீண்டும் 2வது முறையாக  ஒத்திவைக்கப்பட்டது

இந்த நிலையில் இன்று 3வது முறையாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை  குற்றாலம் பேரூராட்சித் தலைவர் தேர்தல் மீண்டும் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் குற்றாலம் பேரூராட்சி செயலாளர் கணேஷ் தாமோதரன் 5 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். திமுக சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் கே.பி.குமார் பாண்டியன் 3 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.

திமுக உறுப்பினர் ஒருவர் அதிமுக உறுப்பினருக்கு வாக்களித்ததால் அதிமுக இந்த பேரூராட்சியை கைப்பற்றியுள்ளது நினைவில் கொள்ளத்தக்கது.