
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதிக்கு தொண்டையில் பொருத்தி இருந்த உணவுக்குழாய் 3வது முறையாக மாற்றப்பட்டுள்ளது.
தற்போது, கருணாநிதி விரைவில் பேசும் வகையில், குழாய் அளவை குறைத்து புதிய உணவுக்குழாய் பொருத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக கருணாநிதி விரைவில் பேசக்கூடும் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
கடந்த 2016ம் ஆண்டு இறுதியில் உடல் நலக் குறைவின் காரணமாக முக தலைவர் மு. கருணாநிதி சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது அவருக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குழாய் பொருத்தப்பட்டது. இதன் காரணமாக பேசும் திறனை கருணாநிதி இழந்தார்.
சுமார் ஓராண்டுக்கு மேலே வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்த அவருக்கு கடந்த அக்டோபர் மாதமும், தொண்டடையில் பொருத்தப்பட்டிருந்த குழாய் அகற்றப்பட்டு, புதிய குழாய் பொருத்தப்பட்டது.
இந்நிலையில் தற்போது 3வது முறையாக அவரது உணவு குழாய் மாற்றப்பட்டுள்ளது. தற்போது அவருக்கு பேச்சு பயிற்சி தரும் வகையில் குழாய் அளவை குறைத்து புதிய குழாய் பொருத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக விரைவில் கருணாநிதியின் குரலை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.
[youtube-feed feed=1]