
லண்டன்: பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது(இறுதி) டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் சதமடித்து இன்னும் களத்தில் நிற்கிறார் இங்கிலாந்து அணியின் ஜாக் கிராலே.
அவர் தற்போது வரை 205 பந்துகளை சந்தித்து 123 ரன்களை எடுத்துள்ளார். அவருடன் 27 ரன்கள் எடுத்து களத்தில் நிற்பவர் ஜோஸ் பட்லர்.
முன்னதாக, இங்கிலாந்து அணி டாஸ் வென்று, முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. பர்ன்ஸ் 6 ரன்களுக்கும், டாப் சிப்லி 22 ரன்களுக்கும், ஜோ ரூட் 29 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் யாசிர் ஷா 2 விக்கெட்டுகளையும், ஷஹீன் அப்ரிடி மற்றும் நசீம் ஷா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். தற்போதைய நிலையில், இங்கிலாந்து அணி 225 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
[youtube-feed feed=1]