நாக்பூர்:

நேற்று நடைபெற்ற வங்கதேசத்துடனான 3வது டி20போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சாளரான  தீபக் சாஹர் தனது அபாத வந்து வீச்சு திறமையால், 3ஓவரில், 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் தீபக் சாஹர் 3.2 ஓவர்கள் வீசி 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்கள் வீழ்த்தினார். சர்வதேச டி20 போட்டிகளில் இதுவே மிகச் சிறந்த பந்து வீச்சு ஆகும். உலக கிரிக்கெட்  ரசிகர்களிடையே தீபக் சாஹர் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

நாக்பூரில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. ராகுல் 52 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 62 ரன்களும் சேர்த்தனர்.

இதையடுத்து களமிறங்ககிய வங்கதேச அணி தொடக்கத்தில் சிறப்பாகவே ஆடி வந்தது.  முகமது நெய்ம் 81 ரன்களைக் குவித்தார். மிதுன் 27 ரன்கள் சேர்த்த நிலையில் மற்ற வீரர்கள் இந்திய பந்து வீச்சாளர்களின் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல், அடுத்தடுத்து வெளியேறத் தொடங்கினார்.

இதனால்,  வங்கதேச அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தின்போது, தமிழகத்தைச் சேர்ந்த வீரரான தீபக் சாஹர்,  6 விக்கெட்கள் வீழ்த்தி அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இப்போட்டியில் அவர் 3.2 ஓவரில் 7 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனையைப் படைத்தார்.

டி20 போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதலாவது இந்திய வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார்.

கடந்த ஏழு ஆண்டுகளாக எந்த பந்துவீச்சாளராலும் முறியடிக்க முடியாத சிறந்த பந்துவீச்சு சாதனையை விக்கெட் வேட்டை நடத்தி முறியடித்தார் தீபக் சாஹர். மேலும், ஹாட்ரிக் சாதனையும் படைத்து அனைவரையும் மிரள வைத்துள்ளார் தீபக் சாஹர்.

முன்னதாக இலங்கை வீரர் அஜந்தா மென்டிஸ் 2012 ஆம் ஆண்டு 8 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்கள் வீழ்த்தியதே சிறந்த பந்துவீச்சாக இருந்தது. அதை முறியடித்து இருக்கிறார் தீபக் சாஹர்.

தீபக் சாஹர் மூன்றாவது போட்டியில் 6 விக்கெட்கள் வீழ்த்தியதால் ஆட்டநாயகன் விருதையும், இந்த தொடரில் சிறந்த பந்துவீச்சு, எகானமி, ஸ்ட்ரைக் ரேட் வைத்து இருந்த பந்துவீச்சாளர் என்பதால் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

தனது வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள தீபக் சாஹர்,  இப்படி ஏதும் நடக்கும் என்று நான் நினைக்க வில்லை. இந்த சாதனை மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறேன். கடவுளின் உதவியால்தான் நான் இங்கு இருக்கிறேன். முக்கியமான ஓவர்களில் பந்துவீச வேண்டும் என்று என்னிடம் கூறப்பட்டது. அந்த பொறுப்பை அணி நிர்வாகம் என்னிடம் கொடுத்ததற்கு மகிழ்ச்சி என்று கூறினார்.