டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. இதன் மூலம் உலக அளவில் கொரோனா உயிரிழப்பில் இந்தியா 3வது இடத்தை பிடித்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ், இரண்டு ஆண்டுகளை கடந்தும் உருமாறிய நிலையில் உலக நாடுகளை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக உலக பொருளாதாரமே நிலைகுலைந்துள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப் பட்டு உள்ளன. தற்போது உருமாறிய வகையில் ஒமிரான் தொற்று பரவி வருகிறது. அதே வேளையில் தொற்று பரவலால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தொற்று பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பு தடுக்கப்பட்டு வருகிறது.
இன்று காலை நிலவரப்படி, உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 36.82 கோடி (388,525,441) பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தொற்றுக்கு இதுவரை உலக அளவில் 57.30 லட்சம் (57,31,488) பேர் உயிரிழந்துள்ளனர். அதே வேளையில் தொற்றின் பிடியில் இருந்து. 30.76 கோடி (307,844,924) பேர் குணமடந்துள்ளனர்.
தொற்று பாதிப்பில், அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு நேற்று மட்டும் மேலும் 2,52,844 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 2,322 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதுவரை அமெரிக்காவில் மட்டும் கொரோனா தொற்றுக்கு 9,20,775 பேர் பலியாக உள்ளனர்.
இந்தியா 2வது இடத்தில் உள்ளது. நாடு முழுவதும் நேற்று புதிதாக 1,49,394 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,19,52,712 ஆக உயர்ந்தது.
நேற்று ஒரே நாளல் மேலும், 1072 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம், மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,00,055 ஆக உயர்ந்து உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தொற்றில் இருந்து 2,46,674 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 4,00,17,088 ஆக உயர்ந்துள்ளது. தற்போது நாடு முழுவதும் 14,35,569 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தொற்று பாதிப்பில் 2வது இடத்தில் இருந்து வரும் இந்தியா, கொரோனா உயிரிழப்பில் 3வது இடத்தை பிடித்துள்ளது.
அமெரிக்காவில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 9,20,775 பேர் பலியாக உள்ளனர். அதைத் தொடர்ந்து 2வது இடத்தில் பிரேசில் உள்ளது. அங்கு இதுவரை 6,30,001 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 5,00,055 பேர் உயிரிழப்புடன் 3வது இடத்தில் தொடர்கிறது.