மொகாலி:
மொகாலி யில் இன்று நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
ஏற்கனவே நடைபெற்ற இரண்டு ஒரு நாள் போட்டியில், முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. ஆனால் இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற 3வது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
இன்னும் இரண்டு ஒரு நாள் போட்டிகள் நடைபெற்ற உள்ளது. இன்றைய போட்டியில் இந்திய அணி வீரர்களில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், நியூசிலாந்து அணியில் டேவிச்சுக்கு பதிலாக நீசம் சேர்க்கப்பட்டார்.
இன்றைய போட்டி மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிகெட் அசோசியேசன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
போட்டியில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். அதனால் நியூசிலாந்து அணியினர் பேட்டுடன் களத்தில் இறங்கியது.
தொடக்க வீரர்களாக கப்தில், லாதம் ஆகியோர் களம் இறங்கினார்கள். கப்தில் அதிரடியாக விளையாடினார். ஆனால் 7-வது ஓவரில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் எல். பி.டபிள்யூ முறையில் அவுட்டாகி வெளியேற்றினார். இவர் 21 பந்தில் தலா இரண்டு பவுண்டரி, சிக்சருடன் 27 ரன்கள் எடுத்தார். அடுத்து லாதம் உடன் கேப்டன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 34 ரன்கள் மட்டுமே சேர்த்தது. வில்லியம்சன் 27 பந்தில் 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். 3-வது விக்கெட்டுக்கு லாதம் உடன் ராஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தார். லாதம் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர் 59 பந்தில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் இந்த ரன்னைத் தொட்டார். .
28.2 ஓவரில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மிஸ்ரா பந்து வீச்சில் டெய்லர் ஸ்டம்பிங் முறையில் ஆட்டம் இழந்தார். அவர் 57 பந்தில் 44 ரன்கள் சேர்த்தார். அதன்பின் நியூசிலாந்தின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது.
30-வது ஓவரின் 4-வது பந்தில் ஆண்டர்சன் 6 ரன்னிலும், 31-வது ஓவரின் 2-வது பந்தில் ரோஞ்சி 1 ரன்னிலும், 32-வது ஓவரின் ஐந்தாவது பந்தில் லாதம் 61 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இதனால் நியூசிலாந்து அணி 17 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுக்களை இழந்தது. அடுத்து வந்த சான்ட்னெர் 7 ரன்னிலும், சவுத்தி 23 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.
9-வது விக்கெட்டுக்கு நீசம் உடன் ஹென்றி ஜோடி சேர்ந்தார். அப்போது நியூசிலாந்து அணி 37.5 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்து தத்தளித்து கொண்டிருந்தது.
நீசம் – ஹென்றி ஜோடி அசராமல் ஆடியது. இந்திய பந்து வீச்சாளர்களின் பந்துகளை துவம்சம் செய்தது.
குறிப்பாக நீசம் 44 பந்தில் 6 பவுண்டரி யுடன் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார். இவர் 49-வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டம் இழந்தார். அவர் 47 பந்தில் 7 பவுண்டரியுடன் 57 ரன்கள் சேர்த்திருந்தார். இந்த ஜோடி 9-வது விக்கெட்டுக்கு 67 பந்தில் 84 ரன்கள் குவித்தது.
முடிவில் நியூசிலாந்து அணி 48.4 ஓவரில் 285 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. ஹென்றி 37 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 39 ரன்கள் விளாசி ஆட்டம் இழக்காமல் இருந்தார். நியூசிலாந்து அணி 49.4 ஒவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 285 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி சார்பில் கேதர் ஜாதவ் 5 ஓவர்கள் வீசி 39 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 10 ஓவர்களில் 75 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பும்ப்ரா, மிஸ்ரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
286 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.
286 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரோகித் சர்மா, ரகானே ஜோடி ஆடியது.
இதனையடுத்து 286 ரன்கனை துரத்திய இந்திய அணி வீரர் ரகானே ஒற்றை இலக்க எண்ணில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ரோகித் சர்மா வெளியேற கேப்டன் டோனி-கோலி இணை நிதானமாக விளையாடி இந்திய அணி வெற்றி பெற உதவியது. இந்த இணை 3வது விக்கெட்டுக்கு 151 ரன்களை குவித்தது.
கேப்டன் டோனி 80 ரன்னில் ஆட்டமிழக்க, கோலியுடன் மணீஷ் பாண்டே இணைந்து நல்ல ஒத்துழைப்பை அளிக்க இந்திய அணி 48.2 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது.
துணை கேப்டன் விராட் கோலி 154(134). மணீஷ் பாண்டே 28(34) ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இதனையடுத்து 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.