சென்னை:

நாடு முழுவதும் 5வது கட்ட நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், இன்னும் 2 கட்ட தேர்தல் மட்டுமே பாக்கி உள்ளது. இந்த நிலையில்,  பாஜக, காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளின் 3வது அணி அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஏற்கனவே பல மாநிலங்களில் சுற்றுப் பயணம் செய்து எதிர்க்கட்சி தலைவர்களின் ஆதரவை பெற்று வரும் நிலையில், நேற்று கேரளா சென்று கம்யூனிஸ்டு முதல்வர் சந்திரசேகரராவை சந்தித்து பேசினார்.

அதைத்தொடர்ந்து   திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு பேச இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், அந்த தகவல் உண்மை என்று கூறப்படுகிறது.

3வது அணி தொடர்பாக ஸ்டாலினை வரும் 13ம் தேதி சந்திரசேகர ராவ் சந்திக்க இருந்ததாக தகவல் உண்மைக்கு புறம்பானது, அப்படி ஒரு திட்டம் ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில், சந்திரசேகரராவ் பாஜகவுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருவதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது. 3வது அணி என்ற பெயரில், மாநில கட்சிகளின் ஆதரவை திரட்டும் சந்திரசேகர ராவுக்கு பின்னணியில் பாஜக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதுவும் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.