டெல்லி:
ந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 3,900 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  195 பேர் பலியாகி உள்ளனர்.
கொரோனா பாதிக்கப்பட்டோர்  மொதத பாதிப்பு எண்ணிக்கை 46,711 ஆக உயர்ந்துள்ள நிலையில், இதுவரை குணமானோர் எண்ணிக்கை . 1,020 ஆக உயர்ந்துள்ளது.

இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவல் இல்லை என்று உறுதிப்படுத்தினார்.  இன்று புதிதாக 3,900 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து,  மொத்த எண்ணிக்கை 46,711 ஆக உயர்ந்துள்ளது
அதுபோல இன்று 195 பேர் பலியானதைத் தொடர்ந்து,  கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,583 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே பாதிக்கப்பட்ட 46,711 பேரில் இதுவரை 13,161 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 14,541 பேர் பாதிக்கப்பட்டு, 583 பேர் பலியாகியுள்ளனர்.
குஜராத்தில் 5804, டெல்லியில் 4898, தமிழ்நாட்டில் 3550, ராஜஸ்தானில் 3061, மத்திய பிரதேசத்தில் 3049 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.