டில்லி

ராக்கில் ஐ எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் கொல்லப்பட்டதாக மாநிலங்கள் அவையில் அமைச்சர் சுஷ்மா ஸ்வ்ராஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த 2014ஆம் வருடம் ஈராக்கில் மொசுல் பகுதியில் 39 இந்தியர்களை ஐ எஸ் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.     அவர்கள் நிலை என்னவென்று தெரியாமல் இருந்தது.   ஈராக் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் அவர்கள் உயிருடன் இருப்பதாக தெரிவித்து வந்தன.

இந்நிலையில் கடந்த 2017 ஆம் வருடம் அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டதாக வந்த செய்தியை உறுதிப்படுத்த அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மறுத்து விட்டார்.   “உயிருடன் இருப்பவர்களை இறந்து விட்டதாக கூறுவது பாவச்செயல்.  நான் அதை செய்ய மாட்டேன்” என அப்போது அமைச்சர் சுஷ்மா கூறினார்.

அதன் பிறகு கடத்தப்பட்டவர்களின் உறவினர்களின் மரபணு மாதிரிகள் எடுக்கப்பட்டன.    தற்போது அந்த மரபணு சோதனையின் அடிப்படையில் கடந்தப்பட்ட 39 இந்தியர்களும் கொல்லப்பட்டு விட்டதாக மாநிலங்கள் அவையில் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்துள்ளார்.