மலேசியாவில் இருந்து இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்ட 379 அரிய உயிரினங்கள் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் பிடிபட்டுள்ளது.

பச்சை பச்சோந்திகள், பேக்மேன் தவளைகள், ஆப்பிரிக்க ஆமைகள் மற்றும் ராட்சத கெக்கோ உள்ளிட்ட உயிரினங்களை துணிப்பைகளில் மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து நடத்தப்பட்ட சோதனையில் கடத்திவரப்பட்ட இந்த அரிய உயிரினங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னை விமான நிலையம் மூலமாகவே இதுபோன்ற உயிரினங்கள் கடத்தப்பட்டு வந்த நிலையில் அண்மை காலமாக திருச்சி, பெங்களூரு விமான நிலையம் அந்த இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த உயிரினங்களை சிறிய பெட்டிகளில் அடைத்து அதை துணிகளுக்கு இடையே பையில் வைத்து கொண்டு வரப்பட்டுள்ளது.

இதில் ஒரே பெட்டிக்குள் இறுக்கமாக அடைத்து வைக்கப்பட்டதில் 8 தவளைகள் மூச்சு திணறி இறந்துள்ளது.

இந்த கடத்தல் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் அவர் மீது வனவிலங்கு மற்றும் சுங்கசட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஞாயிறன்று இரவு கைப்பற்றப்பட்ட இந்த அரிய வகை உயிரினங்களை மீண்டும் மலேசியா அனுப்பி வைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.