ஆண்டிகுவா: விண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், வெற்றிக்கு 377 ரன்கள் தேவை என்ற நிலையில், இறுதிநாளில் ஆடிவரும் இலங்கை அணி, விக்கெட் இழப்பின்றி 101 ரன்களை எடுத்துள்ளது.
அந்த அணியின் துவக்க வீரர்கள் லஹிரு திரிமன்னேவும், திமுத் கருணரத்னேவும் ஆடிவருகின்றனர். லஹிரு, 108 பந்துகளில் 39 ரன்களையும், கருணரத்னே 112 பந்துகளில் 60 ரன்களையும் அடித்து ஆடிவருகின்றனர்.
தற்போதைய நிலையில், 62.2 ஓவர்களில், 276 ரன்களை இலங்கை அணி எடுத்தால்தான் வெற்றிபெற முடியும். ரன்ரேட் குறையாமல், தேவையின்றி விக்கெட்டையும் இழக்காமல் இருந்தால், இலங்கை அணியால் எளிதாக வெற்றிபெற முடியும். அதேசமயம், ரன் ரேட் அளவுக்கதிகமாக குறையும் பட்சத்தில், விக்கெட்டுகளை இழந்து தோல்வியை தவிர்க்க, டிராவை நோக்கி செல்லும் சூழல் ஏற்படும்.
ஒருநாள் தொடரை விண்டீஸ் அணியிடம் இழந்த இலங்கை, டெஸ்ட் தொடரை வென்று பழிதீர்க்க முயலும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.