மும்பை: மகாராஷ்டிராவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக 3728 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆட்கொல்லி வைரசான கொரோனாவால் உலக அளவில் பலி எண்ணிக்கை 59,000 ஐ தாண்டிவிட்டது. 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உயிரிழப்புகளும், பாதிப்புகளும் மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 75 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். மாநிலம் முழுவதும் கொரோனாவால் 3072 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 213 பேர் குணமடைந்தனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 490 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந் நிலையில், மகாராஷ்டிராவில் வெளிமாநில தொழிலாளர்களுக்கான நிவாரண முகாம்கள் 3728 ஆக உயர்ந்துள்ளது. இந்த முகாம்களில் கிட்டத்தட்ட 4 லட்சத்து 97 ஆயிரத்து 398 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவரும் அந்த மாநிலத்தில் உள்ள பல்வேறு ஆலைகளில் பணியாற்றுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.