டெல்லி: கொரோனாவுக்கு பிறகு தலைநகர் டெல்லியில் வசிக்கும் பெண்களிடையே குடிப்பழக்கம் 37% அதிகரித்து உள்ளது என ஆய்வு தகவல்கள் வெளியாகி உள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவின்சில மாநிலங்களில் மதுவிற்பனை தடை செய்யப்பட்டிருந்தாலும், தமிழ்நாடு உள்பட பெரும்பாலான மாநிலங்களில் மதுவிற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. மாநிலங்களுக்கு மதுவிற்பனை மூலம் அதிக வருவாய் கிடைப்பதால், மாநில அரசுகளும், மக்களின் வாழ்வு சீரழிவது குறித்து கண்டுகொள்ளாமல் மதுபான விற்பனைகளை அதிகரித்து வருகின்றன. இதனால், உழைக்கும் வர்க்கம் மட்டுமின்றி பள்ளி சிறுவர்கள், சிறுமிகள் முதல் பெண்கள் வரை பல தரப்பினரும் மதுவுக்க அடிமையாகி வருகின்றன.
இந்த நிலையில், கொரோனாவுக்கு பிறகு பெண்களிடையே மதுகுடிக்கும் பழக்கம் அதிகரித்து இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தலைநகர் டெல்லியில், எ மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிரான பெயரில் செயல்பட்டு வரும் என்.ஜி.ஓ. அமைப்பு பெண்கள் மது குடிப்பது தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆய்வுக்காக டெல்லியில் 500 பெண்களை சந்தித்தாக தெரிவித்து உள்ளது. அதைத் தொடர்ந்தே ஆய்வறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில்,
கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட பின்பு ஊரடங்கு அமலான சூழலில், டெல்லி பெண்களிடையே மதுபான நுகர்வு அதிகரித்து உள்ளது.
கொரோனா பெருந்தொற்றுக்கு பின் ஏற்பட்ட தனிமை, கவலை, தொழில்முறை பொறுப்புகள், மன உளைச்சல் ஆகியவற்றை மறக்க இந்த பழக்கம் அவர்களிடம் அதிகரித்து உள்ளது.
இதில், மனஅழுத்தத்தினால் பெண்களிடையே இந்த விகிதம் 45 சதவீதம் அதிகரித்து உள்ளது. அவர்களில் 7 சதவீதம் பேர் தீங்கு தரும் அளவில் குடிக்கு அடிமையாகி உள்ளனர்.
மதுபான விற்பனையை பெருக்க நிறைய சில்லரை விலை கடைகள், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சலுகை மற்றும் தள்ளுபடி ஆகியவை அதிக அளவில் மதுபானம் வாங்குவதற்கான காரணங்கள் என 77% டெல்லி பெண்கள் தெரிவித்து உள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளில் மதுபானம் குடிப்பது தங்களிடம் அதிகரித்து உள்ளது என 37.6 சதவீத பெண்கள் ஒப்பு கொண்டுள்ளனர்.
42.3 சதவீத பெண்கள் தங்கள் அதிகரிப்பை அவ்வப்போது மற்றும் சந்தர்ப்பத்தை அடிப்படையாகக் கொண்டதாகக் கருதினர்.
அதிகரித்த மது அருந்துதல் 34.4% பெண்களால் அவர்களின் அதிகரித்த குடிப்பழக்கத்திற்கான காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது, மேலும் அவர்களில் 30.1% சலிப்புத்தன்மையைக் குறிப்பிடுகின்றனர்.
கொரோனாவுக்கு பின்னர், ஆண்களை விட பெண்களிடையே அதிக அளவில் குடிக்கும் பழக்கம் அதிகரித்து உள்ளது என்றும் ஆய்வு அதிர்ச்சி தெரிவிக்கின்றது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அரசின் ஆல்கஹால் ஆய்வு மையம், தொலைக்காட்சியில் மது அருந்துவதை அனுமதிக்கும் சித்தரிப்பு மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும் திறன் ஆகியவை ஆகும். “அடுத்த ஐந்தாண்டுகளில் பெண்களின் ஆல்கஹால் சந்தை 25 சதவிகிதம் அதிகரிக்கும் என்று அதிர்ச்சி தெரிவித்து உள்ளது.
“ஆல்கஹால் சந்தையின் பிங்கிங், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து செய்திகளை அனுப்புவது, மதுதான் பெண்கள் ஓய்வெடுப்பதற்கும் வெகுமதி பெறுவதற்கும் சிறந்த வழி, வசதியான சில்லறை விற்பனை அனுபவம், ஏற்கனவே நடைமுறையில் உள்ள காரணங்கள் பெண்கள் மத்தியில் மது அருந்துதல் அதிகரிப்பதற்கு காரணமாகிறது என்றும் தெரிவித்து உள்ளது.