லண்டன்:

75 மில்லியன் டாலர் மதிப்பிலான 37 மில்லியன் டிரமடால் பில்ஸ் என்ற வலி நிவாரண மாத்திரைகள் 3 கன்டெய்னர்களில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இத்தாலி ஜினோவா துறைமுகத்தில் ஷாம்பு மற்றும் போர்வைகள் என்று பெயரிடப்பட்டு கடத்தி செல்லப்பட்டுள்ளது. இத்தாலியில் இருந்து லிபியா கொண்டு செல்வதற்காக கப்பலில் ஏற்றப்பட்டபோது பிடிபட்டுள்ளது.

 

இந்த மருத்து ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் வீரர்களுக்கு வலி தெரியாமல் இருப்பதற்காக வழங்குவதற்காக கொண்டு செல்லப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கன்டெய்னர்கள் இந்தியாவில் இருந்து வந்துள்ளது என இத்தாலி போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவை சேர்ந்த ஒரு மருந்து நிறுவனம் இவற்றை துபாயை சேர்ந்த ஏற்றுமதியாளருக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் டாலருக்கு விற்பனை செய்துள்ளது. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கப்பலில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஒரு டிரமடால் பில்ஸ் மருந்து லிபியாவில் 2 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு நிதியுதவி செய்யும் நோக்கம் அல்லது ஜிகாதி போராளிகளுக்கு உடல் ரீதியிலான அழுத்தத்தை குறைக்கும் நோக்கத்தில் இந்த மருந்துகள் அனுப்பப்பட்டிருக்கலாம். நைஜீரியா தீவிரவாத குழுவை சேர்ந்த போகோ ஹாரம் கூறுகையில், ‘‘ இந்த மருந்து குழுந்தை போராளிகளுக்கு பயன்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது. ஒரு இலக்கை நோக்கி குழுந்தை போராளிகளை அனுப்பும் போது டிராமடால் மருந்து உட்கொள்ள செய்யப்படுவார்கள்’’ என்றார்.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் ஏற்கனவே தங்களது வீரர்கள் பசியறியாமல் இருக்கவும், சோர்வடையாமல் இருக்கவும் கேப்டகன் என்ற மருந்தை வீரர்களுக்கு வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.