நெதர்லாந்து:
நெதர்லாந்தில் ஊரடங்கை சரியாக கடைபிடிக்காத காரணத்தால் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெதர்லாந்தின் முதல் ஊரடங்கு நாளில் ஊரடங்கை சரியாக கடைபிடிக்காததால் 3, 600 பேருக்கு அபராதம் செலுத்தப்பட்டது மட்டுமல்லாமல், ஊரடங்கு விதிகளை மீறியதால் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நெதர்லாந்தில் கடந்த சனிக்கிழமை முதல் இரவு 9 மணியிலிருந்து 4:30 மணி வரை மக்கள் யாரும் தெருக்களில் நடமாடக் கூடாது. மிகவும் அவசரமெனில் தகுந்த காரணத்துடன் வெளியில் வரவேண்டும் என அறிவிக்கப்பட்டது.
நெதர்லாந்தில் ஊரடங்கு உத்தரவு துவங்கிய நாளிலிருந்து 80% மக்கள் அதனை சரியாக கடைப்பிடித்துள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஊரடங்கு உத்தரவை மீறிய காரணத்தால் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் ஊரடங்கை சரியாக கடைபிடிக்காததால் 3, 600 பேருக்கு அபராதம் செலுத்தப்பட்டுள்ளது எனவும், அபராதம் செலுத்தப்பட்ட ஒவ்வொருவரும் 95 யூரோக்கள் செலுத்தியுள்ளனர் எனவும் நெதர்லாந்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை முதல் நெதர்லாந்தில் துவங்கிய இந்த ஊரடங்கு பிப்ரவரி 9 ஆம் தேதி வரை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.