கரூர்: த.வெ.க. தலைவர் விஜய் கரூர் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. இந்த சோக சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10லட்சம் நிவாரணம் அறிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அறிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திரக்க முதல்வர் ஸ்டாலின் இரவோடு இரவாக கரூர் பயணமாகிறார்.

விஜய் கரூர் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. கரூர் விஜய் பிரசாரத்தில் கூட்ட நெரிசல் 8 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட 36 பேர் உயிரிழப்பு மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமுடன் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த சோக சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்துக்கு குடியரசு தலைவர் முர்மு, பிரதமர் மோடி, ஆளுநர் ரவி, காங்கிரஸ் தலைவர் கார்கே, பிரியங்கா காந்தி உள்பட வடமாநில அரசியல் தலைவர்கள், தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி உள்பட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உடடினயாக தலைமைச்செயலகம் வந்த முதல்வர் ஸ்டாலின், அங்கு அமைச்சர் நேரு உள்பட மூத்த அமைச்சர்கள், தலைமை செயலாளர் உள்பட முக்கிய அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து, கரூரில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அறிவுறுத்தி உள்ளதுடன், அமைச்சர்களையும் உடனே விரைந்து செல்ல உத்தரவிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து, இன்று இரவே தனிவிமானம் மூலம் ஸ்டாலின் சென்னையில் இருந்து திருச்சி வந்து அங்கிருந்து கரூர் வருகை தரவுள்ளார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து, விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் நிதியுதவியும் சிகிச்சை பெற்று வீடு திரும்புவோருக்கு தலா ஒரு லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.