சென்னை: சென்னையில் புதிய தொழில் வரி நடைமுறை  அமலுக்கு வருவதாக மாநகராட்சி அறிவித்துஉள்ளது. அதன்படி,  தொழில்வரி 35 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் ஜூலை மாதம் மேயர் பிரியா தலைமையில்  நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் தொழில் வரி உயர்த்துவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அதன்படி, 2024, ஜூலை 30ந்தேதி நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில்,  தொழில்வரியை 35 சதவீதம் வரை உயர்த்துவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் தொழில் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் சட்ட விதிகள் படி ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் ஒருமுறை தொழில் வரி விகிதங்களை மாற்றி அமைக்கலாம். இந்த தொழில் வரி மாற்றம் செய்யும்போது குறைந்தபட்சம் 25 சதவீதத்துக்கும் குறையாமலும், அதிகபட்சமாக 35 சதவீதத்துக்கு மிகாமலும் தொழில் வரியில் மாற்றம் செய்ய வேண்டும்.  சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை கடந்த 2018 ம் ஆண்டு தொழில் வரி விகிதம் மாற்றி அமைக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வந்தது. அதன்பிறகு அதில் மாற்றம் செய்யப்படவில்லை. கடந்த 6 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தொழில் வரியை 35 சதவீதம் வரை அதிகரிக்க சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  இந்த  தீர்மானத்தின்படி மாத வருமானம் 21 ஆயிரம் ரூபாய்க்குள் உள்ள நபர்களுக்கான வரி விகிதத்தில் எந்த உயர்வும் செய்யப்படவில்லை. மாறாக ரூ.21 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை வருமானம் உள்ளவர்களுக்கான வரி என்பது ரூ.135 ல் இருந்து ரூ.180 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.45 ஆயிரம் வரை வருமானம் உள்வளர்களுக்கான தொழில் வரி என்பது ரூ.315ல் இருந்து ரூ.430 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரூ.45 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கான தொழில் வரி என்பது ரூ.690ல் இருந்து ரூ930 ஆக உயர்த்த இந்த தீர்மானம் என்பது இடம் வழங்குகிறது.

இந்த தொழில் வரியை மேற்கூறிய வருமானதாரர்கள் 6 மாதத்துக்கு ஒருமுறை செலுத்த வேண்டும். இந்த நிலையில்,  இந்த அரையாண்டு முதல் இந்த வரி உயர்வு அமலுக்கு வருகிறது.

ரூ.21 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டுப வர்களுக்கு ரூ.135-ல் இருந்து ரூ.180 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.30,001 முதல் ரூ.45 ஆயிரம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு ரூ.315-ல் இருந்து ரூ.425 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது வருடத்துக்கு ரூ.630 கட்டியவர்கள் இனி ரூ.850 கட்ட வேண்டும். அதே போல ரூ.45,001 முதல் ரூ.60 ஆயிரம் வரை வருமானம் ஈட்டுபவர்கள் ரூ.690-க்கு பதில் ரூ.930 கட்ட வேண்டும். ரூ.60,001 முதல் ரூ.75 ஆயிரம் வரையிலும், அதே போல் ரூ.75 ஆயிரத்துக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களும் பழைய வரியை கட்டினால் போதும். அவர்களுக்கு வரி உயர்த்தப்படவில்லை. இந்த வரி உயர்வுக்கு மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த அரையாண்டு முதல் இந்த வரி உயர்வு அமலுக்கு வருகிறது.

சென்னை மாநகராட்சியில் தொழில் வரி மிகப்பெரிய வருமானமாக உள்ளது. 2023-2024-ம் ஆண்டில் தொழில் வரி மட்டும் ரூ.532 கோடி கிடைத்துள்ளது. இந்த நிலையில் தொழில் வரியை மாநகராட்சி உயர்த்தி இருக்கிறது. தற்போது தொழில்வரி  35 சதவீதம் வரி உயர்த்தப்பட்டுள்ளது/