அக்டாவ்
கஜகஸ்தானில் நடந்த விமான விபத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று அசர்பைஜான் தலைநகர் பாகு நகரில் இருந்து ரஷியாவின் ட்ரோஸ்னி நகருக்கு புறப்பட்ட பயணிகள் விமானத்தில் 67 பேர் பயணித்தனர். இந்த விமானம் கஜகஸ்தான் நாட்டின் வான்பரப்பில் சென்று கொண்டிருந்தபோது, அதிக பனிமூட்டம் நிலவியுள்ளது.
எனவே, விமானத்தை கஜகஸ்தானில் உள்ள அக்டாவ் நகரில் உள்ள விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க விமானி முயற்சித்தபோது திடீரென விமானத்தின் மீது பறவைகள் மோதியுள்ளன.
இதனால் விமானத்தை வேகமாக தரையிறக்க விமானி முயன்ர போது எதிர்பாராத விதமாக விமானம் திடீரென கிழே விழுந்து வெடித்து சிதறியது. இதனால் 35 பேர் உயிரிழந்து 32 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.