மும்பை: மகாராஷ்டிராவில் இன்று 34 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,236 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா மாநிலம் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. நாளுக்கு நாள் பாதித்தோரின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே இருக்கிறது.
இந் நிலையில், இன்று புதிதாக 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டு உள்ளது. புனேவில் 23 பேரும், மும்பையில் 6 பேரும், நாசிக் பகுதியில் 4 பேரும், தானே பகுதியில் இருந்தும் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3,236 ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை மகாராஷ்டிராவில் 194 இறப்புகள் பதிவாகி உள்ளன.