டெல்லி: முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தியின் 33வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல் உள்பட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி விடுதலைப்புலிகளால் தமிழ்நாட்டில் படுகொலை செய்யப்பட்ட நாள் மே 21ந்தேதி. இந்த கொடுஞ்செயலை அரங்கேற்றிய விடுதலைப்புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையில், இந்த கொலை குற்றச்சாட்டியில் சிக்கியவர்களை, உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இது சலசலப்பைஏற்படுத்தியது. இதற்கிடையில், மத்தியஅரசு, ராஜீவ்காந்தியின் , அவரது நினைவு தினமான மே 21- ந்தேதி பயங்கரவாத எதிர்ப்பு தினமாக கடைபிடித்து வருகிறது.
இன்று மே 21ந்தேதி மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33- வது நினைவு தினமாகும். இதையொட்டி, தலைநகர் டெல்லியில் வீர் பூமியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. அங்கு, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் கள் சோனியா காந்தி எம்.பி, ராகுல் காந்தி எம்.பி, ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் ப.சிதம்பரம், சச்சின் பைலட், கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவும் பங்கேற்றார். இன்றைய தினம் பயங்கரவாத எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுவதையொட்டி உறுதிமொழியும் எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதுபோல, தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் ஆங்காங்கே ராஜீவ்காந்தி உருவ படம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். பல இடங்களில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளும், உணவுகளும் வழங்கினர்.
பிரதமர் மோடி எக்ஸ் வலைதளபக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் நமது முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு நாளில் அவருக்கு எனது அஞ்சலிகள் என தெரிவித்துள்ளார்.