டில்லி:
உலகளவில் நடைபெறும் குழந்தை திருமணத்தில் இந்தியாவில் பங்கு 33 சதவீதமாக உள்ளது.
சுமார் 103 மில்லியன் இந்தியர்கள் 18 வயது பூர்த்தி அடைவதற்குள் திருமணம் செய்து வைக்கப்ப டுகிறார்கள். இதில் 85.2 மில்லியன் பேர் பெண்கள்.
நடிகரும், சமூக ஆர்வலருமான சபனா ஆஸ்மி குழந்தை திருமணத்தில் இந்தியாவின் நிலை குறித்த ஆ க்ஷன் எய்டு இந்திய அறிக்கையை வெளியிட்டார்.
அதில் மேலும், கூறுகையில், ‘‘103 மில்லியன் குழந்தை திருமணம் என்பது பிலிப்பைன்ஸ் நாட்டின் ஒட்டு மொத்த மக்கள் தொகையின் எண்ணிக்கையாகும். 2011ம் ஆண்டில் கணக்கெடுப்பின் படி இங்கு 100 மில்லியன் பேர் மட்டுமே உள்ளனர். இதே ஜெர்மனியின் மக்கள் தொகை 80.68 மில்லியனாகும்.
உலகில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 28 பெண் குழந்தை திருமணம் நடக்கிறது. இதில் இந்தியாவில் 2 திருமணங்கள் நடக்கிறது. குழந்தை திருமணத்தை நிறுத்தினால் 27 ஆயிரம் பிரசவ இறப்பு, 55 ஆயிரம் சிசு இறப்பு, ஒரு லட்சத்து 60 ஆயிரம் குழந்தைகள் இறப்பை தடுக்க முடியும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆஸ்மி கூறுகையில்,‘‘குழந்தை திருமணத்தின் அடித்தளம் ஆணாதிக்கம் தான். ஆணாதிக்கத்தை கட்டுப்ப டுத்தினாலே குழந்தை திருமணத்தை தடுத்துவிட முடியும். பெண்களுக்கு கல்வி மற்றும் நம்பிக்கையை ஏற்படுத்துவதன் மூலம் குழந்தை திருமணங்கள் நிறுத்தப்பட்டு, அவர்கள் சொந்தமாக வாழ்க்கையை ஏற்ப டுத்திக் கொள்ள உதவும்’’ என்றார்.