சென்னை: “தமிழகத்தின் வனப்பரப்பை 33% ஆக அதிகரிக்க நடவடிக்கை” எடுக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூடடத்தில் உரையாற்றி முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் 3 உயிர்க்கோள் காப்பகங்கள், நீலகிரி உயிர்க்கோள் காப்பகம், மன்னார் வளைகுடா உயிர்க்கோள் காப்பகம் மற்றும் அகஸ்தியர் மலை உயிர்க்கோள் காப்பகம் ஆகியவற்றை மேம்படுத்த அறிவுறுத்திய முதல்வர் ஸ்டாலின், வன உயிரின சரணாலயங்கள், புலிகள் காப்பகங்கள் ஆகியவற்றை பாதுகாக்கவும், அவற்றை உரிய முறையில் பராமரிக்கவும், வனவிலங்குகளை வேட்டையாடும் குற்றச்செயலை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
மேலும், “மரம் நடுதல் திட்டத்தை தீவிரப்படுத்தி தமிழ்நாட்டின் வனப்பரப்பை 33% ஆக உயர்த்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.மனிதர்கள் வனவிலங்குகளுக்கு இடையேயான மோதல்களை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் பொதுமக்கள் மற்றும் இளையதலைமுறையினரின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும்.
தொழிற்சாலைகள் மூலம் நீர், நிலம், காற்று மாசுபடுதலை தடுப்பது குறித்தும், தமிழ்நாடு தேயிலை தோட்டக்கழகம், தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம், அரசு ரப்பர் கழகம் ஆகியவற்றை மேம்படுத்தவும், அதற்கான திட்ட நடவடிக்கைகள் குறித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.