செவ்வாய் கிரகத்தில் ஒரு பெரிய மர்ம பள்ளத்தை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

328 அடி அகலமுள்ள இப்பள்ளம் ‘ஏலியன்’ எனப்படும் வேற்றுகிரகவாசிகளின் நிலத்தடி உலகிற்கான “வாயில்” என்று அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இத்தனை அகலமான இந்தப் பள்ளம் தோன்றியதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. என்றாலும், ஒரு விண்கல் தாக்கத்தால் இது உருவாகியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

செவ்வாய் கிரகத்தின் தீவிர வெப்பநிலை மற்றும் மேற்பரப்பு அளவிலான கதிர்வீச்சு மனித வாழ்க்கைக்கு எளிதில் தீங்கு விளைவிக்கக் கூடியதாகும்.

எனவே, அச்சிவப்பு கிரகத்தின் கடுமையான நிலைமைகளிலிருந்து உயிரினங்களைப் பாதுகாக்க, அந்த நிலத்தடி சுரங்கப்பாதையே சரியானதாக இருக்குமென நாசா நம்புகிறது.

இப்பள்ளமானது, வேற்றுகிரகவாசிகள் வாழும் ஒரு விரிவான நிலத்தடி சுரங்கப்பாதை வலையமைப்பிற்கு இட்டுச் செல்லும் முக்கியப் புள்ளியாக இருக்கலாம்.

செவ்வாய் கிரகத்தின் சுற்றுச் சூழல் இப்போது வேண்டுமானால் மனித வாழ்க்கைக்கு உகந்ததாக இல்லாமல் இருக்கலாம், எதிர்காலத்தில் விண்கலங்கள், ரோபோக்கள் மற்றும் மனித கிரகங்களுக்கு இடையேயான ஆய்வாளர்களுக்கும் கூட இது பாதுகாப்பான தங்குமிடமாக அமையலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.