டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர்  மொத்த எண்ணிக்கை 1,02,67,283 ஆக உயர்ந்துள்ளது.  நேற்று ஒரே நாளில் புதியதாக 21,944 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது.

அதுபோல நேற்று ஒரேநாளில் 299 பேர் பலியான நிலையில், இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,48,774 ஆக அதிகரித்துள்ளது.  நேற்று மட்டும் நோய் தொற்று பாதிப்பில் இருந்து நாடு முழுவதும்  விடுபட்டோர் எண்ணிக்கை 26,406 பேர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 98,59,762 ஆக உயர்நதுள்ளது.

தற்போதைய நிலையில் 2,55,898 பேர் சிகிச்சையில்  உள்ளனர்.

அதே வேளையில், இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதாரத்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.

[youtube-feed feed=1]