ஜோர்டான்: ரமலான் என்பது உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களுக்கு புனிதமான மாதம். இஸ்லாமிய குழந்தைகளுக்கு  அற்புதமான உணவு மற்றும் அற்புதமான பரிசுகள் நிறைந்த வண்ணமயமான காலம்.
ஆனால் இந்தப் புனித ரமலான் மாதத்தில் ஜோர்டானில் 30,000 க்கும் மேற்பட்ட  இஸ்லாமிய சிரியன் குழந்தைகள் பட்டினியில் தவிக்கிறார்கள்.
4
அம்மனில் உள்ள அதிகாரிகள் அதன் சிரியாவுடனான வடகிழக்கு எல்லையில் வாழும் அகதிகளுக்கு உயிர் காக்கும் உணவு மற்றும் மருத்துவ உதவிகளை நிறுத்தியுள்ளனர். 35C தாண்டக்கூடிய வெப்பநிலையில், ஆயிரக்கணக்கான சிரிய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உணவு மற்றும் பாதுகாப்பான குடிநீர் மறுக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய மாநிலமான ஈராக் மற்றும் லேவண்ட் குழு (ISIL, மற்றும் ISIS எனவும் அழைக்கப்படும்) உறுப்பினர்களின் ஒரு தாக்குதலைத் தொடர்ந்து, ஜோர்டானிய அதிகாரிகள் கடந்த மாதம் “பெர்ம்” என்னும் ஒரு பகுதிக்கு அவசர உதவிகள் விநியோகத்தை  தடுத்துள்ளனர்.  மனிதாபிமானக் குழுக்களின் வேண்டுகோளையும் மீறி, ருக்பான் அகதிகள் முகாமை எந்தக் கருணையும் இல்லாமல், ராணுவ மண்டலம் என அறிவித்துள்ளது , ஆள் நடமாட்டத்தை தடை செய்துள்ளது.
 
2
ஊட்டச்சத்தின்மைக்கு ஐந்து வயதிற்கு கீழ் உள்ள கிட்டத்தட்ட 13,00 குழந்தைகள் சோதனை செய்யப்பட்டுள்ளனர், 204 பேர் மிதமான ஊட்டச்சத்தின்மையினால் அவதியுறுகிறார்கள் எனவும் 10 பேர் கடுமையான ஊட்டச்சத்தின்மையினால் அவதியுறுகிறார்கள் எனவும், 24.7 சதவிகித குழந்தைகள் தீவிரமான வயிற்றுப் போக்கு காரணமாக அவதியுறுகிறார்கள் என்றும் தெரிகிறது.
இந்த அறிக்கையின்படி, தங்கள் நாட்டு ஆண்கள் தொடர்ச்சியான வன்முறை மற்றும் கடத்தப்பட்டு  கொல்லப்படுவதால், பெண்கள் தான் அவர்களது குடும்பங்களின் முக்கியமானப் பராமரிப்பாளர்களாகவும் கவனிப்பவர்களாகவும் மாறிவிட்டனர்.
ஐக்கிய நாடுகளால் சுமார் 650,000 சிரிய அகதிகள் ஜோர்டானில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஜோர்டான் அகதி முகாம்களில் 300,000 பாலஸ்தீனிய அகதிகள் வாழ்கின்றனர். ISIL தோற்றத்திற்குப் பிறகும், 2003 ல் அமெரிக்க தலைமையிலான படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பிற்குப் பிறகும், பல ஈராக்கியர்கள் ஜோர்டானில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
ஆங்கில உரையுடன் காணொளி: