சென்னை:

சென்னை நந்தம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வரும் 43வது சென்னை புத்தகக் கண்காட்சி இன்றுடன் முடிவடைகிறது. 13வது நாளாக நடைபெற்று வரும் கண்காட்சி இன்று துணைமுதல்வர் ஓபிஎஸ் உரையுடன் நிறைவடைகிறது.

இந்த கண்காட்சிக்கு பொங்கல் விடுமுறை தினங்களில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் வந்திருந்ததாக கூறப்படும் நிலையில், இந்த ஆண்டு சுமார் 30லட்சம் பேர் கண்காட்சியை கண்டுகளிப்பார்கள் என எதிர்பார்ப்பதாக லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாகவும் கண்காட்சி அமைப்பாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

43-வது சென்னை புத்தகக் கண்காட்சி  கடந்த 9-ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 13வது நாளான (21ந்தேதி)ம் இன்றுடன் நிறைவடைகிறது.

இந்த கண்காட்சியில் 800 அரங்குகள், 15 லட்சம் படைப்புகள் உள்பட 20லட்சம் வாசகர்கள் உள்பட 30 லட்சம் பார்வையாளர்கள்  வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 30லட்சம் பேர் கண்காட்சிக்கு வந்தார்களா என்பது ஓரிரு நாளில் தெரிய வரும்.

பொங்கல் விடுமுறையையொட்டிடி கடந்த வாரம் முழுவதும் விடுமுறை நாட்கள் அப்போது, புத்தகக் கண்காட்சியில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கடந்த ஒருவாரமாக மக்கள் கூட்டம் அலைமோதியது. நிலையில் இன்றுடன் கண்காட்சி முடிவடைகிறது.

கண்காட்சியை நேரில் சென்று பார்வையிட்ட பத்திரிகை டாட் காம் இணையஇதழின் ஆசிரியர் குழுவினர், அங்கு படைப்பாளிகள் மற்றும் புத்தக விற்பனையாளர்களிடன் கருத்துக்களையும் கேட்டறிந்தது.

கருச்சட்டை பதிப்பகத்தின் பதிப்பாளர் சுப.வீரபாண்டியன், இந்த ஆண்டு புத்தக்கண்காட்சிக்கு 10லட்சம் பேர் வந்திருப்பதாகவும்,  ஆண்டுக்கு ஆண்டு கண்காட்சிக்கு வருபவர்களின் எண்ணிக்கை கூடுவதாகவும் தெரிவித்தார்.

அதுபோல, கண்காட்சியில் இடம்பெற்றுள்ள வனிதா பதிப்பகத்தை சேர்ந்த மயில்வேலன் கூறும்போது, தங்கள் வெளியீடுகளான டெட், டிஎன்பிஎஸ்சி தொடர்பான புத்தகங்கள் பெரும் வரவேற்பை பெற்றதாகவும், தங்களது புத்தகங்களை வாங்கி படித்து ஏராளமானோர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் கூறினார்.

மற்றொரு அரங்கமான குழந்தைகளுக்கான புத்தக அரங்கமான  பாரதிய புத்தகாலயத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் கூறும்போது, 827 தலைப்புகளில் புத்தங்கள் தாங்கள் வைத்திருப்பதாகவும், உலகின் சிறந்த புத்தகங்களை தமிழில் மொழிப் பெயர்ந்து, தமிழர்களிடையே தமிழ் ஆர்வத்தை தூண்டி வருவதாக கூறினார். மேலும் பல புத்தக அரங்கத்தின் உரிமையாளர்கள், தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விரிவான தகவல்கள் கீழே உள்ள வீடியோவில் காணலாம்….

கடந்த 9ந்தேதி முதல்வர் தொடங்கி வைத்த இந்த புத்தகக் கண்காட்சி, துணை முதல்வரின் உரையுடன் இன்று நிறைவடைகிறது.