கொரோனா வைரஸ் 2வது அலை உலகம் முழுவதும் பரவியது. தற்போது 3வது அலை பரவுவதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதற்கிடையில் தொற்றில் இருந்து மக்களை காத்துக்கொள்ள தடுப்பூசி போடும் பணிகளையும் உலக நாடுகள் தீவிரப்படுத்தி வருகின்றனர். இருந்தாலும் சில நாடுகளில் உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனமும் எச்சரித்து உள்ளது.
இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19.73 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 19,73,09,069 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 178,491,148பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா தொற்றின் கோரத்தாக்குதல் காரணமாக இதுவரை 42 லட்சத்து 13 ஆயிரத்து 120 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது உலகம் முழுவதும் 1,46,06,317 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 87,074 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.