ஸ்ரீநகர்:
ஜம்மு அனந்தநாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும், எல்லை பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற பயங்கர துப்பாக்கி சண்டையில், 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினரும், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளும் அவ்வப்போது எல்லை மீறி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள ஹகுரா பகுதியில் பயங்கரவாதிகள் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, , பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்தை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக பாதுகாப்பு படையினர்மீது துப்பாக்கி சூடு நடத்தி பயங்கரவாதிகள் தப்பி செல்ல முயன்றனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் 2 பயங்கரவாதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மற்றொருவரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாகவும், அவர்கள் தங்கி இருந்த வீட்டில் இருந்து ஏகே 47 துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், குண்டுகள் ஏராளமான அளவில் வைக்கப்பட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.