கொடைக்கானல்:
பிரபஞ்சத்தில் பல்வேறு அரிய நிகழ்வுகள் அவ்வப்போது நடந்து வருகிறது. மிக அரிய நிகழ்வாக 400 ஆண்டுகளுக்கு பின் நாளை (டிச.21) பூமி, வியாழன், சனி ஆகிய 3 கோள்கள் ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றன.

இது குறித்து கொடைக்கானல் வானிலை ஆராய்ச்சி மைய விஞ்ஞானி டாக்டர் எபினேசர் கூறுகையில், “வானில் அரிய நிகழ்வாக `கோ ஜங்ஷன்” எனப்படும் பூமி, வியாழன், சனி ஆகிய கோள்கள் நேர்கோட்டில் வருகின்றன. கடந்த அக்டோபர் மாதமே இந்த நிகழ்வு வானில் தொடங்கி உள்ளது. இதன் உச்சபட்சமாக நாளை இந்த மூன்று கோள்களும் நேர்கோட்டில் வருகின்றன. இதேபோன்ற நிகழ்வு கடந்த 1623ல் நடந்துள்ளது. ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடக்கிறது. இதனால் பருவநிலையில் மாற்றங்கள் ஏதும் நிகழ வாய்ப்பில்லை. இது இரவு 7 மணிக்கு தெரியும். சூரியன் மறையும் மேற்கு திசையில் இந்த அரிய நிகழ்வுகளை காணலாம். குளிர்காலத்தின் உச்சநிலையும் அப்போதுதான் தொடங்குகிறது.