சென்னை: சென்னையில் தனியார் பள்ளி வாகனம் மோதி மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி முதல்வர் உள்பட 3 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் ஆழ்வார் திருநகரில் தனியார் பள்ளி வளாகத்தினுள்ளேயே, வாகனத்தை திருப்பும்போது, பின்னால் வந்த சிறுவன்மீது  வாகனம் மோதி உயிரிழந்தான். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வாகனத்தின் டிரைவர், கிளினரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், , மாணவன் தீக்‌ஷித் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பள்ளியின் முதல்வர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து, பள்ளி முதல்வர் உள்பட  உட்பட 3 பேரை பணி நீக்கம் செய்தது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கல்வித்துறை பரிந்துரையின் பேரில் பள்ளி நிர்வாகம் 3 பேரையும் டிஸ்மிஸ் செய்துள்ளது என்று முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார். அதன்படி, பள்ளி முதல்வர் தனலட்சுமி, போக்குவரத்து குழுவில் இருந்த 2 உறுப்பினர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.