விமான நிலையத்தில் பயணிகளை வழியனுப்பவோ அல்லது வரவேற்கவோ வருபவர்கள் அவர்களை கட்டிப்பிடிக்க 3 நிமிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று நியூஸிலாந்து விமான நிலையத்தின் கட்டுப்பாடு விதித்துள்ளது.
நியூஸிலாந்து நாட்டின் மொமோனா நகரில் உள்ள டுன்டின் விமான நிலையத்தில் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு பலகையின் புகைப்படம் இணையத்தில் வெளியானதை அடுத்து அது வைரலாகி வருகிறது.
அன்பிற்கினியவர்களை கட்டிப்பிடிக்க விமான நிலையம் கட்டுப்பாடு விதித்திருப்பது மனிதநேயமற்ற செயல் என்று சிலர் இதனை விமர்சித்துள்ளனர்.
எனினும், இந்த கட்டுப்பாட்டால் மேலும் ஏராளமான பயணிகளை கட்டிப் பிடித்து வழியனுப்ப முடியும் என்று கூறியுள்ள விமான நிலைய அதிகாரிகள் 3 நிமிடத்திற்கும் அதிகமாக கட்டிப்பிடிக்க நினைப்பவர்கள் கார் பார்க்கிங்கிற்கு செல்லலாம் என்று அறிவுறுத்தியுள்ளது.
எனினும், பயணிகளை கட்டிப்பிடிக்க நியூஸிலாந்து விமான நிலையம் விதித்துள்ள இந்த கட்டுப்பாடு சமூக வலைதளத்தில் வைரலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.